தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் அடிப்பக்கம் சிமெண்டு கான்கிரீட் உடைந்து கம்பிகள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் பலத்த காற்றடித்தால் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு உடனடியாக பாலக்கோடு மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், பாலக்கோடு.