சேதமடைந்த மின்கம்பம்

Update: 2023-07-09 08:20 GMT

சாமியார்மடத்தில் இருந்து வேர்கிளம்பி செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாலையில் சாமியார்மடம் சந்தையின் அருகில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

மேலும் செய்திகள்