கடலூர் வண்டிப்பாளையம்-புருகீஸ்பேட்டை செல்லும் சாலையின் ஓரத்தில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த கம்பத்தை சூழ்ந்து செடி-கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே மின்கம்பத்தை சூழ்ந்துள்ள செடி-கொடிகளை அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.