நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும்,கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையில் காவிரி ஆற்றின் குறுக்கே தரைவழி பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த மின் விளக்குகளில் ஒரு சிலவற்றை மட்டும் எரிகின்றன. இதனால் அந்த பகுதியில் காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே எரியாத மின்விளக்குகளை உடனடியாக எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமசாமி, மோகனூர்.