காஞ்சிபுரம், எட்டையபுரம் கிராமம் சிவன் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் எப்போது கீழே விழும் என்ற அச்சத்தில் உள்ளனர். பழுதடைந்த மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.