தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மின்விளக்கு நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இது பற்றி பலமுறை மருத்துவமனை அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இந்த துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி.