திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம்.மில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவில் பணம் எடுக்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருட்டாக இருப்பதால் வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் மக்கள் பணம் எடுக்க செல்ல அச்ச படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்
பொதுமக்கள், திருவாரூர்