சேலம் தாதகாப்பட்டி பென்ஷன் லைன்தெரு தெற்கு தபால் நிலைய சாலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தில் உள்ள ஒயர்கள் தாழ்வாக தொங்கி கொண்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் ஒயர்களில் மோதி செல்கின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மின்கம்பம் முழுவதும் சேதமடைந்தும், கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டும் உள்ளன. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து தரவேண்டும்.
-நாகராஜ், தாதகாப்பட்டி, சேலம்.