சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிட காலனியில் இருந்து சேனைகவுண்டனூர், ஊத்து ஓடை பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மின்கம்பத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை. இந்த சாலையில் இரவு நேரங்களில் பாம்பு, விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொது மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு அச்சமும் ஏற்படுகிறது. எனவே இந்த மின்கம்பத்தில் மின்விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தனகோடி, தேக்கம்பட்டி, சேலம்.