தேனியில் மதுரை சாலையின் மையப் பகுதியில் புதிதாக மின்கம்பங்கள் நட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மதுரை சாலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சிக்னல் விளக்கை மறைக்கும் வகையில் மின்கம்பம் நடப்பட்டுள்ளது. விபத்து தடுப்பு நடவடிக்கையாக மஞ்சள் விளக்கு ஒளிரும் இந்த சிக்னல் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது சிக்னலை மறைத்து மின்கம்பம் நடப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவ, மின்கம்பம் அல்லது சிக்னல் ஆகியவற்றில் ஒன்றை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.