புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கேட் புதுகை நகரின் நுழைவு பகுதியாக உள்ளது. இந்த வழியாக அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் மேட்டுப்பட்டி கேட் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் விளக்கு எரியாததால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.