எரியாத மின்விளக்குகள்

Update: 2023-05-21 17:53 GMT

நாமக்கலம் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக அந்த கோவில் அருகில் 5 முகப்புகளை கொண்ட உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது அதில் ஒன்று மட்டுமே எரிகிறது. மற்ற முகப்புகள் எரியாமல் இருப்பதால் இருட்டாக காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் பக்தர்கள் போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே எரியாத மின்விளக்குகளை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அக்னிதர்மா, சேந்தமங்கலம், நாமக்கல்.

மேலும் செய்திகள்