மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலை காவேரி பாலத்தில் மின் கம்பிகள் அறுந்து தொங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தற்போது காற்றும் வேகமாக வீசுவதால் எந்த நேரமும் அறுந்துவிழும் அபாயம் உள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்தபாலத்தில் அறுந்து தொங்கும் மின் கம்பிகளை சீரமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,மயிலாடுதுறை