தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் சோதனை சாவடி எதிரே காயல்பட்டினம் செல்லும் சாலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. அதை தாங்கி நிற்கும் கம்பம் மிகவும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது. அந்த கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.