கொடுமுடி காங்கேயம் ரோட்டில் எஸ்.என்.பி.நகரில் உள்ள தெருவிளக்கு கடந்த பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த தெரு இருளில் மூழ்கியுள்ளது. உடனே எஸ்.என்.பி.நகரில் தெருவிளக்கு எரிய செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தெருவிளக்கு ஒளிர்கிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
டி.வி.கதிர், கொடுமுடி.