செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பம்மல் கிருஷ்ணா நகர் பிள்ளையார் கோவில் தெருவில் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த பகுதியை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் தெருவிளக்குகள் எரியாத காரணத்தினால் மாலை நேரம் கூட இரவு போல் காட்சி தருகிறது. எனவே பழுதடைந்த விளக்குகளை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.