வெண்ணந்தூர் மற்றும் அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், மின்னக்கல், நாச்சிப்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமானோர் விசைத்தறி கூடம் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மின்சாரம் ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட முறையில் தடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கூலி தொழிலாளர்கள், விசைத்தறி கூட உரிமையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-பாபு, வெண்ணந்தூர்.