எலும்புக்கூடான மின்கம்பம்

Update: 2023-04-23 18:09 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே காவனூர் வெள்ளாற்றங்கரையோரத்தில் உள்ள கரும்பு வயலில் மின்கம்பம் பலத்த சேதமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எந்நேரத்திலும் விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கம்பம் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்