தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2023-04-16 17:04 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி காந்திநகர் குடியிருப்பு பகுதியில் மின்கம்பங்களில் செல்லும் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்சார கம்பிகளை தாமதமின்றி உயர்த்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சாரதி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்