நன்னிலம் வட்டம் போழக்குடி பஞ்சாயத்து க்கு உட்பட்ட கிளியனூர் தோப்புதெருவில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். சரக்கு ஆட்டோ மற்றும் வாகனங்கள் சென்றால் மின் கம்பிகள் உரசுகிறது. இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நன்னிலம்