நெல்லிக்குப்பம் வைடிப்பாக்கம் மற்றும் மேல்பாதி செல்லக்கூடிய பிரதான சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்டு காரைகள் பெயா்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் மின்கம்பங்கள் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுவதால், எந்நேரமும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன் சேதமடைந்த கம்பங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கம்பங்களை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.