கடலூர் முதுநகரில் சிதம்பரம்-கடலூர் சாலையில் உள்ள பெரும்பாலான தெருமின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருக்கின்றன. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.