சேலம் மாவட்டம் மேச்சேரி நெடுஞ்சாலை உதவி பொறியாளர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் நடுவே தடுப்பு சுவர் உள்ளது. இந்தநிலையில் இரவு நேரத்தில் தடுப்பு சுவர் இருப்பது தெரிவது இல்லை. இதனால் கார், லாரி போன்ற வாகனங்கள் அடிக்கடி இதில் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்தை தவிர்க்க ஒளிரும் மின் விளக்குகள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரை, மேச்சேரி, சேலம்.