அபாய நிலையில் உள்ள மின்கம்பம்

Update: 2023-03-15 10:37 GMT

அபாய நிலையில் உள்ள மின்கம்பம்

பல்லடம்- பொள்ளாச்சி மெயின் ரோட்டில், பழைய பல்லடம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உள்ள இரும்பு மின் கம்பம் பழுதடைந்து எந்த நேரமும் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் தாலுகா அலுவலகம் உள்ளதால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் மின் கம்பம் எந்த நேரமும் விழும் அபாய நிலையில் உள்ளதால் மின்கம்பம் சாய்ந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அபாய நிலையில் உள்ள இந்த இரும்பு மின்கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தவேல்,பல்லடம்.

987654 38373

மேலும் செய்திகள்