பழுதான மின்கோபுர மின்விளக்கு

Update: 2023-03-05 16:22 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பால சந்திப்பு சாலை பகுதியில் கிராமப்புற சந்திப்பு சாலை, புறநகர் பஸ்கள் வந்து செல்லும் இணைப்பு சாலையாக இந்த மேம்பாலம் உள்ளது. இங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த மின்விளக்கு எரியவில்லை. இதனால் இந்த மேம்பாலம் சந்திப்பு சாலையில் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பழுதாகி உள்ள இந்த உயர்மின் கோபுரம் விளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-ராஜன், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்