கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கவுண்டனூர் கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளில் மின்கம்பிகள் உரசி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. வாகனங்கள் கடந்து செல்லும் போது ஒருவர் மரக்குச்சியில் மின் ஒயர்களை தூக்கிப்பிடிக்கும் நிலை உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் இந்த மின்கம்பிகளை சரி செய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.