சேலத்தில் காந்தி விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலில் உள்ள கேட் பகுதியில் இரும்பு கம்பி பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால இந்த நுழைவு வாயிலை கடந்து செல்லும் போது பொது மக்கள் தடுக்கி கீழே விழுந்து அடிபடும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயர்ந்த இரும்பு கம்பியை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-குருபாலன், மஜ்ரா கொல்லப்பட்டி, சேலம்.