டிரான்ஸ்பார்மருக்கு சுற்றுச்சுவர்

Update: 2023-02-22 16:56 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் எதிரே சாலை ஓரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர்் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக கம்பி வேலி மீது மோதும் அபாயம் உள்ளது. எனவே அந்த மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றி சுற்றுச்சுவரும், அதன்மீது ஒளி பிரதிபலிப்பானும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்