கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே ஆலமரத்து மேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு செல்வதற்காக சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவில் மின்கம்பம் நடப்பட்டு அந்த வழியாக மின் கம்பி பொறுத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்த மின்கம்பத்திலிருந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரீட் சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டுள்ளதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் தவிர நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல முடியாத சூழ்நிலையில் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் உள்ளனர். அவர்களது கார்களை மாற்றுஇடத்தில் நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தறி பட்டறைக்கு பெரிய வாகனங்கள் செல்ல முடியாததால் தறித்தொழியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.