ஆபத்தான மின்கம்பம்

Update: 2023-01-29 16:21 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு - பொம்மிடி செல்லும் சாலையில் உதவி வேளாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு உள்ள மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியே வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்