நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. காலை வேளையில் தினசரி மார்க்கெட் பகுதி, வெள்ளப் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், அலவாய்பட்டி மற்றும் அத்தனூர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்தி வெண்ணந்தூர்.