உயர்கோபுர மின்விளக்கு அமைக்கலாமே!

Update: 2023-01-22 14:50 GMT

தர்மபுரி மாவட்டம் தர்மபுரி- சேலம் பைபாஸ் சாலையில் நல்லம்பள்ளி அருகே உள்ளது அதியமான்கோட்டை துணை மின்நிலையம். அப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் வேகமாக வந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இப்பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பசுபதி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்