கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி ஊராட்சி தேசு பள்ளி ராகவன் கொட்டாய் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் சிமெண்டு சாலையில் உள்ள மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்து சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது. அந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சிகள் விழுந்து இரும்பு கம்பிகள் தெரிந்தபடி எலும்புகூடுபோல் தெரிகின்றன. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-பாலா, ராகவன்கொட்டாய், கிருஷ்ணகிரி.