புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் இருந்து இலுப்பூர் செல்லும் சாலையில் ஆவூர் அருகே வடக்கு புதுப்பட்டி பஸ் நிறுத்தத்தின் வளைவான சாலையில் உள்ள 4 மின்கம்பங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இவ்வழியே செல்லும் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் வளைவான சாலை ஓரத்தில் மின்கம்பம் இருப்பதால் எதிரே வரும் வாகனம் கவனிக்கப்படாமல் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.