நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. கான்கிரிட் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்