சேதமடைந்த மின் கம்பம்

Update: 2023-01-04 12:41 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கொண்டப்ப நாயக்கன் பாளையம் பிரதான சாலையில் மின் கம்பம் சேதமடைந்து அடிப்பகுதி ஓட்டை விழுந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் அருகில் உள்ள காசாங்குளம் மேல்கரை சந்தில் ஒரு மின் கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து சேதமடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்