திருவாரூர் மாவட்டம் உப்பூர் வீரன்வயல் கந்தபரிச்சான் ஆற்றங்கரை சாலையில் இருந்த மின் கம்பங்கள் கஜா புயலில் சாய்ந்து போனது. இது வரை சரி செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரவேல், உப்பூர்