தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம். புதூரின் மைய பகுதியில் அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சில நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் சிறியவர் முதல் பெரியவர் வரை வெளியில் வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகன ஓட்டிகளும் சில நேரங்களில் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-காந்தி, சி.எம்.புதூர், தர்மபுரி.