நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலையின் நடுவில் மின்கம்பத்தை இழுத்து நிறுத்தும் கம்பி அமைக்கப்பட்டிருந்தது.இந்த கம்பியை அப்புறப்படுத்தாமல் அப்படியே புதிய தார்ச்சாலை போட்டுள்ளனர்.இதனால் வாகன ஓட்டிகள் இந்த மின் கம்பியில் மோதி விபத்தில் சிக்கி விடுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை