ஆபத்தான உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-12-25 16:27 GMT
  • whatsapp icon

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் நகர மைய பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இந்த உயர்கோபுர மின் விளக்கை பராமரித்த பணியாளர்கள் ஆபத்தான முறையில் மின்விளக்கை பாதியிலேயே தொங்கும்படி விட்டு சென்று விட்டனர். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே ஆபத்தான உயர்கோபுர மின்விளக்கை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராகவன், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி

மேலும் செய்திகள்