தெருவிளக்கு அவசியம்

Update: 2022-12-21 16:20 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளி கிராமம் அருந்ததியர் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்பவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதிக்கு தெருவிளக்கு அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அருள், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்