சேலம் அருகே இரும்பாலையில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி பஸ் நிறுத்தம் பகுதியில் போதிய தெருவிளக்குகள் வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதால், பொதுமக்கள் நடமாட அச்சம் அடைந்துள்ளனர். எனவே அங்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். மேலும் அதே பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடையும் அமைக்க வேண்டும்.
-கோவிந்தசாமி, இரும்பாலை, சேலம்.