நாகை மாவட்டம் திருமருகலில் இருந்து நன்னிலம் செல்லும் மெயின் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக ஏராளமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புத்தகரம்-கேதாரிமங்கலம் இடையே வளைவு பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மேல் பகுதியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் எந்நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழுந்து விபத்துக்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டும்.