தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி 13-வது வார்டில் உள்ள 7, 8, 9-வது குறுக்கு தெருக்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் குறைந்த மின்னழுத்தம் கொண்டதாக இருப்பதால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து வருகிறது. எனவே மின்சாரதுறை அதிகாரிகள் இந்த பிரச்சினையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கமலக்கண்ணன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.