பிரதான சாலையில் மின்விளக்கு வசதி

Update: 2022-11-20 16:00 GMT

தர்மபுரி நகரில் அப்பாவுநகர் பிரதான சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கம், தனியார் அலுவலகங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பிரதான சாலை வழியாக இரவு நேரங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்த சாலை இருள் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே போதுமான மின்விளக்குகளை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-மாது, அப்பாவு நகர், தர்மபுரி.

மேலும் செய்திகள்