புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், அத்தாணி ஊராட்சி கணபதிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.