தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியேறி ஊராட்சியில் பூதலூர் சாலையில் பரிசுத்தம்நகர் பகுதியில் (புதிய பாலத்தினையொட்டி) உள்ள மின்கம்பம் முழுவதும் சேதமடைந்து,சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.எனவே, இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.ஆகவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்பழகன்
களிமேடு