தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பிகள்

Update: 2022-10-26 14:28 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரைக்கால்- பூந்தோட்டம் சாலையில் கிடாமங்கலம் பகுதியில் உள்ள சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அமைந்துள்ள உயரழுத்த மின்மாற்றி கடந்த பல மாதங்களாக பராமரிப்பின்றி சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த மின்மாற்றியில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்