ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-16 08:29 GMT

தென்தாமரைகுளம் பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட இலந்தையடிவிளை பார்க் பக்கத்தில் இருந்து வடக்குபக்கம் பொன்னார்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள 2 மின்கம்பங்களின் அடிப்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. அவை எந்த நேரமும் சாய்ந்து விழும் வகையில் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அந்த மின் கம்பங்களை உடனே மாற்றி புது மின்கம்பங்கள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எம்.விஜிதா செந்தில்குமார்,தென்தாமரைகுளம். 

மேலும் செய்திகள்