நாகை மாவட்டம் திட்டச்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் எந்த வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. மேலும் லேசான மழையில் கூட பல மணிநேரம் மின் தடை ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள் படிப்பதில் சிரமம் அடைகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தடைஇல்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திட்டச்சேரி.